விபத்து அபாயம்

Update: 2024-08-11 17:47 GMT

வத்தலக்குண்டு-கணவாய்ப்பட்டி சாலையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையே சாலையோரத்தில் குடிநீர் குழாய் வால்வு உள்ளது. அந்த வால்வை சுற்றி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய் தரைமட்டத்தில் இருந்து ½ அடி உயரத்தில் இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்பவர்கள் குழாய் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் குழாய் வால்வை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்