அடிப்படை வசதி தேவை

Update: 2024-08-11 17:27 GMT

சின்னாளப்பட்டி 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்