பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா ?

Update: 2024-08-11 17:12 GMT

நாமக்கல் நகரின் மைய பகுதியில் மலைக்கோட்டை அடிவாரத்தில் கமலாலய குளம் உள்ளது. இந்த குளத்தில் சமீபத்தில் பெய்த மழைக்கு தண்ணீர் ஓரளவுக்கு தேங்கி நிற்கிறது. இது அந்த வழியாக செல்வோரை பரவசப்படுத்துவதாக அமைந்து உள்ளது. ஆனால் வந்த வழியாக செல்லும் சிலர் குடிநீர் பாட்டில்களை குளத்தில் வீசி செல்கிறார்கள். இது கரையோரத்தில் மிதந்து வருகிறது. இதனால் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. எனவே கமலாலய குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்