பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2024-08-11 13:33 GMT


தஞ்சாவூர் மாநகராட்சி 2-வது வார்டு குருவிகார தெருவுக்கு செல்லும் சாலையில் மழைநீர் வடிகால் பாலம் உள்ளது அந்த பாலம் உடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெறிகிறது. இதனால் பாலத்தை கடந்து செல்வோர் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் மழை நீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைத்து வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சாவூர்

மேலும் செய்திகள்