கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-08-11 13:06 GMT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பெரியகடை வீதி சாலையில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் தூர்வாரப்படாமல் மண் மற்றும் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் மழை நீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது. சாலையை கடக்க முடியாமல் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்