பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த பாதையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.