தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி முன்பாக சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோதர் மைதீன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.