நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவை அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கபபட்டது. ஆனால் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வனத்துறை அலுவலகத்திற்கு நடந்து செல்லக்கூடிய பி.எஸ்.என்.எல். அலுவலக நடைபாதையில் முறிந்து விழுந்த மரக்கிளை அகற்றப்படாமல் உள்ளது. இது அந்த வழியாக நடந்து செல்ல கூடியவர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே அந்த மரக்கிளையை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.