கீழ்குளம் அருகே செந்தறை பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் உள்ள தெருவில் அதிகளவில் தெருநாய்களும், பூனைகளும் சுற்றித்திரிகின்றன. நாய்கள் சாலையில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சிக்கிறன. பூனைகள் வீடுகளுக்குள் புகுந்து இயற்கை உபாதை கழித்து விட்டு செல்கின்றன. இதனால், தெருவாசிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிறிஸ்தவ ஆலய தெருவில் சுற்றித்திரியும் தெருநாய்களையும், பூனைகளையும் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரின்ஸி, செந்தறை.