பஸ் வசதி வேண்டும்

Update: 2024-08-04 16:17 GMT

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் வெள்ளியங்குன்றம் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள், காஞ்சரம்பேட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வருகின்றனர். இதனால் பெரியார் நிலையத்தில் இருந்து காஞ்சரம்பேட்டை வழியாக வெள்ளியங்குன்றம் வரை பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்