பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் நந்தனார் காலனி சாலையில் உள்ள வாய்க்காலின் குறுக்கே சிறுபாலம் கட்டப்பட்டு வருகிறது. 20 அடி அகலம் கொண்ட இந்த சாலையில் 12 அடி அகலத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டு வருகிறது. முறையாக அமைக்கப்படாத இந்த சிறுபாலம் கட்டும் பணியால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.