புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சமையல் கூடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சமையல் கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் தற்காலிகமாக, அருகே உள்ள மரத்தடியில் தற்காலிகமாக சமையல் பணிகள் நடந்து வருகின்றன. இது குறித்து ஏற்கனவே துறை சார்ந்த அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இவற்றை பாதுகாப்பான முறையில் இடித்து அகற்றிவிட்டு புதிய சமையல் கூடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.