ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2024-08-04 13:06 GMT

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆவடி பைபாஸ் சாலையில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. ரேஷன் கடைக்கு செல்லும் வழியில் உள்ள முன்புறம் சாலையை ஆக்கிரமித்து பழக்கடை, செருப்பு கடை, வாசலில் தனியாருக்கு சொந்தமான ஜெனரேட்டர் வண்டிகள், கார்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பெண்கள், முதியவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ரேஷன் கடைக்கு பின்புறம் இந்தப் பகுதிகளுக்கான சுடுகாடு எரிமேடை உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் சுடுகாட்டிற்கு உள்ளே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட :துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்