ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இரவு நேரங்களில் மிகவும் அவதியடைகின்றனர். மேலும் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த வேண்டும்.