திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சி காரப்புடையான்பட்டியில் அமைந்துள்ள எல்லைக் காவல் தெய்வமான கருப்பண்ணசாமி கோவிலுக்குண்டன பாதை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சுமார் 12 அடி அகலம் உள்ள பாதை ஆக்கிரமிக்கப்பட்டு 2 அடி அகலத்திற்கு மட்டுமே நடை பாதைபோல் உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.