திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே அதிக அளவில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி கடிக்க செல்கின்றன. மேலும் பகல் நேரத்தில் கூட்டமாக சுற்றி திரிவதால் நடந்து செல்வதற்கே அச்சமாக உள்ளது. . தெருநாய்கள் கூட்டமாக இருப்பதால் சிறுவர்கள் தெருவில் செல்வதற்கே பயப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.