குழித்துறை மேற்கு ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பகுதியில் கழிவுநீரும், சகதியும் நிறைந்து புதர் மண்டி காணப்படுகிறது. கழுவன்திட்டை தெருபகுதியில் இருந்து வரும் கழிவுநீர் ரெயில் நிலையத்துக்கு செல்லும் வழியில் வடிந்தோடுகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே குழித்துறை நகராட்சி நிர்வாகம் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பாதையில் கழிவுநீர் ஓடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.