தெருநாய் தொல்லை

Update: 2024-08-04 08:50 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலங்கோட்டை பகுதியில் கிறிஸ்தவ ஆலயம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதனால் அந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த பகுதியில் உள்ள சாலையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகளை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி