தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட மண்ணடி கிராமத்திற்கு செல்வதற்காக ஆண்டிதோப்பிற்கும் சீதப்பாலுக்கும் இடையே ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் சேதமடைந்து பக்கவாட்டில் இருபுறமும் விபத்து தடுப்புச்சுவர்கள் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்ெபட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தின் பக்கவாட்டின் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.