திங்கள்சந்தையில் காமராஜர் பஸ்நிலையம் பகுதியில் போலீஸ் நிலையம் அருகில் ஒரு காலி இடம் உள்ளது. இந்த இடத்தில் பலர் சிறுநீர் கழிக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி அந்த இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.