நெல்லிக்குப்பம் நகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட சரவணபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பல லட்சம் செலவில் பொது கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இது வரை திறக்கப்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இயற்கை உபாதை கழிக்க அவதிப்படுகின்றனர். எனவே பொது கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வி்டுத்துள்ளனர்.