பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அங்கு மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த பள்ளத்தில் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் பணிகளை முடிக்க வேண்டும் அல்லது பள்ளத்தை மூட வேண்டும்.