விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள இ.ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த நிழற்குடை இடிந்து விழுந்து விடுமோ என பயணிகள் அச்சப்படுகின்றனர். ஆதலால் புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?