நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் அருகே துல்லுப்பட்டியில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே அங்கன்வாடி மையத்தை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.