மதுரை தெற்குவாசல் ஜெயவிலாஸ் மேம்பாலத்தில் பல மாதங்களாகவே மையப்பகுதியில் பக்கவாட்டு சுவர் முற்றிலுமாக சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணிக்க அச்சமடைந்து வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?