பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான விளம்பர பதாகைகள் உரிய அனுமதி இன்றி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் பலத்த காற்று வீசுவதினால், இந்த விளம்பர பதாகைகள் பஸ் பயணிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.