வடிகால் ஓடை அமைக்கப்படுமா?

Update: 2024-07-28 08:07 GMT

 கப்பியறை 2-ம் நிலை பேரூராட்சி உட்பட்ட விளக்கம் தோட்டத்தில் இருந்து ஏழுவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் விளக்கம் தோட்டம் பகுதியில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் சாலையோரத்தில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராஜா, விளக்கம் தோட்டம்.

மேலும் செய்திகள்