கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அச்சங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலமானது மிகவும் பழுதடைந்தும், குறுகியதாகவும் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.