ராமநாதபுரம் நகரில் இரவு நேரங்களில் சிலர் வாகனங்களின் முன்பகுதியில் பல வண்ண விளக்குகளை ஒளிர செய்து இயக்குகின்றனர். இதனால் எதிரே வரும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், விபத்தில் சிக்கி காயமடைய வாய்ப்பு உள்ளது. எனவே வாகனங்களில் இதுபோன்று பயணம் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.