சாலையில் தேங்கும் மண்

Update: 2024-07-21 12:03 GMT

அரியலூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து சந்தை பேட்டை, நகராட்சி அலுவலகம், பல்துறை அலுவலகம், ஐ.டி.ஐ., புறவழிச்சாலை ரவுண்டானா, புதிய பஸ் நிலையம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்டர் மீடியன் அமைந்துள்ளது. இந்த சென்டர் மீடியனின் இருபுறமும் அதிகளவில் மணல்கள் தேங்கி மேடாக காட்சியளிக்கிறது. இந்த மணல்கள் ஒரு போதும் அகற்றப்படுவதில்லை. தற்போது காற்றடி காலம் என்பதால் காற்றில் மண்கள் பறக்கிறது. சில நேரங்களில் புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதோடு அல்லாமல் மேலே சொன்ன அலுவலகங்களுக்கு இவ்வழியே அதிகளவில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் சில சமயங்களில் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக சென்டர் மீடியனின் இருபுறமும் தேங்கியுள்ள மண்களை அகற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்