பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், புதுஅம்மாபாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முன் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு வலைகள் அமைக்கப்படாமல் உள்ளதால் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் அருகே பள்ளி மாணவ- மாணவிகள் சென்றால் அவர்கள் கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.