சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் மார்க்கெட்டிற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மார்க்கெட்டில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் மார்க்கெட்டிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே மக்களின் நலனை கருதி மாநகராட்சி அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், மாட்டையும் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.