கன்னியாகுமரியில் சாலையோரங்களில் பயணிகள் நடந்து செல்வதற்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செல்லும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக விபத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் விபத்து தடுப்பு கம்பிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த விபத்து தடுப்பு கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவசகாயம், கன்னியாகுமரி.