புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சாராயக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாராயத்தை பாலீத்தீன் பைகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி குடிப்பவர்கள் கண்ட இடங்களில் பாலத்தீன் பைகளை வீசி செல்கின்றனர். எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலத்தீன் பைகளுக்கு பதிலாக மாற்று வழிமுறைகளை சம்பந்தப்பட்ட துறைகள் கையாள வேண்டும்.