மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியின் சித்தா பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. அது எப்போது இடிந்து விழும் என்ற நிலை உள்ளது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?