ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர்.மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.