ஏரியில் வீசப்படும் மதுபாட்டில்கள்

Update: 2024-07-14 12:26 GMT

பெரம்பலூர் மாவட்டம், காரை கிராமத்தில் அரசு மதுபானக்கடை ஏரிக்கரை அருகே உள்ளது. இந்த மதுபானக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கும் மதுப்பிரியர்கள் இந்த ஏரிக்கரையின் ஓரத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்கின்றனர். சிலர் ஏரியில் பாட்டில்களை எறிந்து விட்டு செல்வதினால் மழை காலங்களில் இந்த ஏரியிலிருந்து செல்லும் வாய்க்கால்களில் பாட்டில்கள் சென்று விவசாய நிலங்களில் பரவும் அபாயம் உள்ளது. இதனால் விவசாய பணிகளில் ஈடுபடுபவர்கள் கால்களிலும், கைகளிலும் இந்த கண்ணாடி தூண்டுகள் கிழிக்கும் அபாயம் உள்ளதால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்