கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!

Update: 2024-07-07 17:46 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களில் பஸ் வசதி இன்றி அவதிப்படுகிறார்கள். இதனால் பஸ்களில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளன. எனவே அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களிலும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் நேரத்திலும் போதிய பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்