கம்பம் காசி விஸ்வநாதர் மற்றும் கம்பராய பெருமாள் கோவில் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களை தெருநாய்கள் துரத்துவதால் அவர்கள் அச்சமடைகின்றனர். மேலும் இரவு நேரங்களிலும் அந்த வழியாக செல்பவர்களை தெருநாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கோவில் அருகே சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.