சென்னை பல்லாவரம், தர்கா ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இந்த பாதை சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் கழிவுநீர் ஓடுகிறது. மேலும் மின்விளக்குகள் ஏதும் இல்லாமல் இருட்டாக இருப்பதால் பெண்கள், மாணவர்கள் அந்த பகுதி வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சுரங்கப்பாதையை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.