இளம்பிள்ளை பஸ் நிறுத்தத்தில் இருத்து சேலம் செல்லும் வழியில் சித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலானது இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்டதாகும். இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு பெண்களுக்கென்று கழிவறை வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள், பெண்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தி வேண்டும்.