தேவதானப்பட்டி அருகே உற்பத்தியாகும் மஞ்சளாறு வத்தலக்குண்டு வழியாக செல்கிறது. இந்தநிலையில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாததால் மஞ்சளாறு புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே மஞ்சளாற்றில் புதர்களை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.