கழிவறை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-30 13:51 GMT

சென்னை சூளை பஸ் நிறுத்தம் அருகே கழிவறை உள்ளது. ஆனால் தற்போது அந்த கழிவறை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே பஸ் நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் அவசர நேரங்களில் மிகவும் அவதி அடைகின்றனர். ஆனால் சிலர் திறந்த வெளிகளில் சிறுநீர் கழிப்பதால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. எனவே சேதமடைந்து இருக்கும் கழிவறை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்