பண்ருட்டி அருகே பணப்பாக்கம் - கணிசபாக்கம் செல்லும் சாலையின் இருபுறத்தையும் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே பெரியளவில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்பை விரைந்து அகற்ற வேண்டியது அவசியம்.