கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள சுமார் 400 கடை வியாபாரிகள் பயன்படுத்த கழிப்பிடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிப்பிடம் முறையாக தூய்மைப்படுத்தப்படாததால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும், மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சீரான இடைவெளியில் கழிப்பிடத்தை சுத்தம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.