புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 38 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்துவமனையில் மருந்து, மாத்திரைகள் போதுமான அளவு இல்லை. குறிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட தொடர் சிகிச்சைக்கான மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருந்து, மாத்திரைகள் ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.