அரியலூர் மாவட்டம், முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள முக்குளம் அருகே அளவேரி என்ற ஏரி உள்ளது. சலுப்பை, ஆலத்திப்பள்ளம் மற்றும் சத்திரம் கிராமத்தில் உள்ள வடிகால் மழைநீர் ஆனாது இந்த அளவேரி ஏரிக்கு வந்து சேர்கிறது. மழைநீர் நிரம்பி காட்டுவாரி ஓடை வழியாக உபரி மழைநீர் சென்று பாண்டியன் ஏரியில் சேர்ந்து வடவாற்றில் கலக்கிறது. இந்த அளவேரி ஏரியின் வடிகால் மதகு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த ஏரியில் மழைநீர் சேமித்து வைக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மதகுகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.