சேத்தியாத்தோப்பில் இருந்த சேதமடைந்த அரசு மாணவிகள் விடுதி இடித்து அகற்றப்பட்டது. ஆனால் அதற்கு பதில் புதிய விடுதி கட்டப்படவில்லை. இதனால் தனியார் இடத்தில் தற்காலிகமாக மாணவிகள் விடுதி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய இடவசதி இல்லாததால் மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அனைத்து வசதிகளுடன் புதிய மாணவிகள் விடுதியை கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.