பண்ருட்டி கெடிலம் ஆற்றில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து நிற்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் ஆற்றில் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க ஆற்றில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு, முட்செடிகளையும் வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.