மெதுகும்மல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னப்ப நகர் பகுதியில் முப்பந்தல் குளம் உள்ளது. இந்த குளத்தை தான் அந்த பகுதியில் உள்ள 100 குடும்பங்களுக்கு மேற்பட்ட மக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக குளத்திற்குள் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும், குளத்தில் குளிக்கும் பொதுமக்களுக்கு தோல்நோய் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் குளத்தில் பொதுமக்கள் குளிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தில் கலக்கும் கழிவுநீரை தடுப்பதுடன், குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-விஜிகுமார், வாறுதட்டு.